search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ரோந்து"

    • பண்ருட்டி அருகே அம்மன் கோவிலில் தாலி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூர் காலனியில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12-ந் தேதி மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிசென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு விசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர்.இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.ஆனால் 2 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    உடனே 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்க ப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் திருடியதை ஒப்புக்கொண்டனர். உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் அய்யனார் (வயது 35), அங்கப்பன் (25) என்றும் 2 பேரும் விசூர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து அம்மன் தாலி, குத்து விளக்கு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சுற்றுலா பயணிகளின் வரத்து ஆரோவில் பகுதிகளில் அதிகமாக இருக்கும்.
    • தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் வருவதை கண்டவுடன் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் சுற்றுலாப் பயணிகளின் புகழ்பெற்ற இடம் ஆகும். மேலும் இந்த பகுதியில் வெளிநாட்டவர் தங்கம் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து ஆரோவில் பகுதிகளில் அதிகமாக இருக்கும். ஆரோவில் அருகே குயிலாபாளையம், பட்டானூர் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக ஆரோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் நேற்று இரவு குயிலா பாளையம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது பெண் உள்பட2 வாலிபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இதே போன்று பட்டானூர் பகுதியில் சோதனை செய்தபோது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் போலீசார் வருவதை கண்டவுடன் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். மேலும் வாலிபர் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் சிதம்பரத்தை சேர்ந்த சிதம்பரக்கனி (வயது 28), கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்தி (22), புவனகிரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். பிடிபட்ட பெண் விழுப்புரம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் இடமான ஆரோவில் பகுதியல் உள்ள தங்கும் விடுதிகளில் சமீப காலமாக விபச்சார கூடமாக மாறி வருவது அங்குள்ள பொது மக்களிடையே வருத்தத்தை அளிக்கிறது.

    • புதுவையில் இருந்து கேரளாவுக்கு கார் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     விழுப்புரம்:

    புதுவை மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டியாஸ் காரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோட்டகுப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து போலீசாரும் தீவிர கண்க்காணிப்பில் இருந்தனர். மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட தாழங்காடு கிராமம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் முகமது அஸ்லாம் (வயது 24). கேரள மாநிலம் ஏரிக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து கேரளாவுக்கு காரை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.உடனே போலீசார் அவரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    குனியமுத்தூர்,

    போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத் தொட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இப்பகுதியில் எதிர் எதிரே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதனால் எந்த நேரமும் குடிமகன்கள் இப்பகுதியில் கும்மாளமிட்டு வருவது வழக்கம். சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தில் உள்ள பொருட்களை அபேஸ் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் ஹெல்மெட்டுகள் மேலும் வீட்டிற்கு வாங்கி செல்லும் பொருட்கள் ஆகியவை காணாமல் போய் விடும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அடிதடி ரகளை சம்பவங்களும், கூச்சல் குழப்பங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயந்து கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    ஈச்சனாரியை சேர்ந்த முத்து என்பவர் நேற்று சாரதா மில் ரோட்டில் அமைந்துள்ள அரசன் தியேட்டர் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிக்கெட் விவரம் தெரிந்து கொள்ள உள்ளே சென்றார். இரண்டு நிமிடங்களில் வெளிவருவதற்குள் வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பேக் திருட்டு போய்விட்டது.

    ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியிருந்த பேக் திருடு போய்விட்டதால், அதிர்ச்சி அடைந்த அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தியேட்டர் வளாகத்தில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இதுமட்டுமன்றி சராசரியாக ஒரு நாளைக்கு 10 -க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகள் காணாமல் போய் வருகிறது.

    சாரதாமில் ரோடு கார்னரில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. நடந்து செல்லும் தூரத்தில் போத்தனூர் காவல் நிலையமும் உள்ளது. ஆனாலும் இப்பகுதியில் திருட்டு நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கூறுகையில், 24 மணி நேரமும் சீருடை இல்லாத போலீசார் இப்பகுதியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பின் தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர். 

    ×